கரூர், ஏப். 30: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த பரணி பார்க் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். வைபவி 493, பூர்ண, தரணிகா 490, காயத்ரி, சவுமியா 488, ஆகியோர் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்தனர், மேலும் 470 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவர்கள், 450க்கு மேல் 74 பேர், 400க்கு மேல் 146 மாணவர்களும் பெற்றனர். அறிவியல் 4, சமூக அறிவியல் 3 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். இதையொட்டி சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தாளாளர் மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பரணிபார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் சுரேஷ், பள்ளி முதல்வர் சேகர், துணை முதல்வர்கள் முத்துக்குமரன், நவீன்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.