×

தவிட்டுப்பாளையம் காவிரிப்படுகையில் இருந்து சாக்கு மூட்டையில் மணல் எடுத்து டூவீலர்களில் கடத்தல் அதிகரிப்பு

கரூர், ஏப். 30: சாக்கு மூட்டையில் மணல் எடுத்து டூவீலர்களில் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுகிறது. காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து வருகின்றனர். லாரிகள், டாரஸ் லாரிகளில் ஒருபுறம் மணல் அனுமதியின்றி எடுக்கின்றனர். கரூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் காவிரிப்படுகையில் மணலை தோண்டி எடுத்து சாக்கு மூட்டைகளில் நிரப்புகின்றனர்.

இரவு நேரங்களில் டூவீலர்களில் சென்று மணல் எடுக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ஏற்கனவே இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளோம். பகலில் மூட்டைகளில் மணலை நிரப்பி வைக்கின்றனர். இரவுநேரங்களில் பைக்குகளை ஆற்றுக்குள் கொண்டு சென்று மணல் மூட்டைகளை அதில் வைத்து கொண்டு செல்கின்றனர்.

இதனால் இரவுநேரத்தில் ஒரே பைக் சத்தமாக கேட்கிறது. நிம்மதியாக இப்பகுதி மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பைக்குகளில் கொண்டு செல்லப்படும் மணலை லாரிகளில் கொட்டி திருட்டுத்தனமாக விற்பனை செய்கின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. உடனடியாக மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : tweeers ,
× RELATED முட்புதருடன் குண்டும் குழியுமான...