×

ஆந்திராவில் இருந்து வேலூர் மண்டிக்கு மாங்காய் வருகை சீசன் தொடங்கியதாக வியாபாரிகள் தகவல்

வேலூர், ஏப்.30:ஆந்திராவில் இருந்து வேலூர் மண்டிக்கு மாங்காய் வருகை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் மாங்காய் உற்பத்தியில் வேலூர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், அணைக்கட்டு, லத்தேரி, குடியாத்தம் போன்ற பகுதிகளில் மாங்காய் விளைச்சல் அதிகம். வழக்கமாக, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே முன்பருவ ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துவிடும். இந்த ஆண்டு, மாவட்டத்தில் மழை இல்லாததால், மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாங்காய் விற்பனை தற்போதுதான் தொடங்கி உள்ளது.இந்நிலையில், வேலூர் மாங்காய் மண்டிக்கு ஆந்திராவில் இருந்தும், வேலூர் மாவட்டம் லத்தேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் முன்பருவ ரகமான செந்தூரா, பெங்களூரா, மல்கோவா போன்ற ரகங்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு சீசன் தற்போதுதான் தொடங்கியுள்ளது.இதுகுறித்து மாங்காய் வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் குறைவாகத்தான் உள்ளது. ஒரு நாளைக்கு 2 டன் முதல் 3 டன் மாங்காய் மட்டுமே வருகிறது. தற்போது செந்தூரா ₹15-20க்கும், பெங்களூரா ₹8-12, மல்கோவா ₹50க்கும், பங்கனபள்ளி ₹30-40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சீசன் தற்போதுதான் தொடங்கி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் விற்பனை அதிகரிக்கும்’ என்றார்.

Tags : Merchants ,season ,Andhra ,Vellore Mandi ,
× RELATED மழை காலம் தொடங்கியுள்ளதால் அரசு பழைய கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்