×

விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

நாகை, ஏப்.30: நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 6,7,8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக  பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுத் துறையில்  சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமி வசதி மற்றும் சத்தான  உணவுடன் கூடிய 5 முதன்மை நிலைய விளையாட்டு மைய விடுதிகள் சிறுவர்களுக்கான  முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய  இடங்களிலும், சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி  சென்னை, ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது.  

முதன்மை நிலை விளையாட்டு  மைய  விடுதிகளில் சிறுவர்களுக்கு தடகளம், இறகுபந்து, குத்துச்சண்டை,  ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ்,  நீச்சல் போட்டிகளும், சிறுமிகளுக்கு தடகளம்,  இறகுபந்து, மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி   பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கணையராக விளங்குவதற்கு 6,7,8 ம்  வகுப்புகளுக்கு  சிறுவர், சிறுமியர்களுக்கான மாநில அளவிலான தேர்வு வரும் 21.5.2019 அன்று  காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு  விளையாட்டரங்கில்  நடைபெற உள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும்  மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் 2019-2020 ஆண்டுக்கான  சேர்க்கைக்கு எரிய படிவங்கள் www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில்  விண்ணப்பங்களை பெற்க்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED குத்தாலம் காந்திநகர் பாலசுப்பிரமணிய...