இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டிமடத்தில் மவுன அஞ்சலி

ஜெயங்கொண்டம், ஏப். 30: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்காக ஆண்டிமடத்தில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.

இலங்கையில் கடந்த 20ம் தேதி நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.  இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு ஆண்டிமடம் வட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மவுன அஞ்சலி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜோசப் சத்தியமூர்த்தி, அவைத்தலைவர் சின்னப்பராஜ் தலைமை வகித்தனர். இதில் கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கு தந்தையர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>