×

பொன்னமராவதியில் 3 அரசு பள்ளிகள்

100 சதவீத தேர்ச்சிபொன்னமராவதி, ஏப்.30: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் பொன்னமராவதியில் 3 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பொன்னமராவதி பகுதியில் மூன்று அரசுப்பள்ளிகளும் மூன்று தனியார் பள்ளிகளும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 10ம் வகுப்பு தேர்வின் முடிவு நேற்று வெளியானது. இதில் திருக்களம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி,  வார்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி  ஆகிய மூன்று பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இதேபோல பொன்னமராவதி அமலஅன்னைப்பள்ளி, லயன்ஸ் பள்ளி, வலையபட்டி சிதம்பரம் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Tags : government schools ,Ponnamaravathi ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...