×

கொல்லிமலை மளிகை பொருட்கள் புதுகையில் விற்பனை மும்மரம் விலை குறைவால் மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர்

புதுக்கோட்டை, ஏப்.30: கொல்லிமலை மளிகை பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் விளையும் மளிகை பொருட்களுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. கொல்லிமலை மளிகை சாமன்கள் என்பது அந்தகாலத்தில் இருந்து தற்காலம் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமாக உள்ளது. முன்பெல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்தில் ஒருவர் என சுற்றுலா செல்வது போல் கொல்லிமலைக்கு நேரடியாக செல்லாமல் பேளுக்குறிச்சு சந்தைக்கு சென்று அங்கு கொல்லிமலை மளிகை பொருட்களை வாங்கி வருவது வழக்கம். பஸ்கட்டண தொகை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் செல்வது குறைந்துவிட்டது.

இதனால் கொல்லிமலையில் வியாபாரிகள் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வந்து கடைபோட்டு விற்பனை செய்ய தொடங்கினர். இந்நிலையில் சில ஆண்டுகளாக  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக  சோம்பு, சீரகம், கடுகு, வெந்தயம், கொத்தமல்லி, மிளகாய், பட்டை, கிராம்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள்  புதுக்கோட்டை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்னறனர்.

புதுக்கோட்டை அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரி அருகே கொல்லிமலையில் இருந்து வந்த வியாபாரிகள் மளிகை பொருட்களை கடந்த சில நாட்களாக விற்பனை செய்து வருகின்றனர். இதனை மக்களும் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர். இவர்கள் விற்பனை செய்யும் மளிகளை பொருட்களை வெளியில் கடையில் வாங்கினால் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கொல்லிமலை மளிகை பொருட்களை புதுக்கோட்டை பகுதியில் விரும்பி வாங்கி செல்கின்றனர். முன்பெல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கொல்லிமலைக்கு வந்து வாங்கி சென்றனர். தற்போது பல காரணங்களாகல் கிராமத்தினர் வருகை குறைந்துவிட்டது.

இதனால் நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய புதுக்கோட்டைக்கு வந்து விடுகிறோம்.  ஒரு செட் மளிகை பொருட்கள் ரூ.ஆயிரத்து 500 க்கு விற்பனை செய்கிறோம். சிலர் கிராமத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மக்களும் ஆர்வமாக வாங்குகின்றனர். நாங்கள் சில ஆண்டுகளாக இந்த நாட்களில் வந்து விற்பனை செய்றோம். வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்கள் இங்கு தங்கி விற்பனை செய்யவுள்ளோம் என்றனர்.

Tags : Kollimalai ,
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்