×

வரும் கல்வி ஆண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் புதுகை 3ம் இடம் பிடிக்க நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் பேட்டி

புதுக்கோட்டை, ஏப்.30: வரும் கல்வி ஆண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் புதுகை 3ம் இடம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் வனஜா தெரிவித்தார். புதுக்கோட்டை  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு  முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:  புதுக்கோட்டை  மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை முடிவில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை  விட எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம்  அதிகரித்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வரும் கல்வி ஆண்டில் அனைத்து  அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைத்து நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்படும். வரும் கல்வி ஆண்டில் மாநில அளிவிலான தேர்ச்சி  விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் 3 இடங்களில் வருவதற்கு அனைத்து  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில்  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை மொத்தம் 327 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 670  மாணவிகள் உள்பட 23 ஆயிரத்து 271 பேர் எழுதினார்கள்.

இதில் 11 ஆயிரத்து 103  மாணவர்கள் உள்பட மொத்தம் 22 ஆயிரத்து 460 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று  உள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.14 சதவீதம். மாணவிகளின்  தேர்ச்சி விகிதம் 97.90 சதவீதம் ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள் 97.32 சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி  பெறும் பள்ளிகள் 96.30 சதவீதம் தேர்ச்சியும், அரசு பள்ளிகள் 95.57 சதவீதம்  தேர்ச்சியும், பகுதி உதவி பெறும் பள்ளிகள் 97.76 சதவீதம் தேர்ச்சியும்,  மெட்ரிக் பள்ளிகள் 99.77 சதவீதம் தேர்ச்சியும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள்  99.14 சதவீதம் தேர்ச்சியும், நகராட்சி பள்ளிகள் 92.35 சதவீதம்  தேர்ச்சியும், ஓரியெண்டல் பள்ளிகள் 72.22 சதவீதம் தேர்ச்சியும் பெற்று  உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 163 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி  பெற்று உள்ளனர். இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 80 ஆகும். மாநில அளவிலான  தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 12 இடத்தை பெற்று உள்ளது.  கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.41 அதிகரித்து  உள்ளது. தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு  காலை, மாலை சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டது.

தேர்வு முடிந்தவுடன்  மாணவர்களின் தேர்ச்சி சதவீத விகிதம் பெற்றோர்களிடம் கூறப்பட்டது.  தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டது.  இவ்வாறு மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்தி தேர்ச்சி சதவீதம் உயர காரணமான  இருந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு எனது எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகள் ராகவன், குணசேகரன், அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ், ஆங்கிலத்தில்% இல்லை

எஸ்.எஸ்.எல்.சி.  தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கணிதம் பாடத்தில் 14 பே 100-க்கு 100 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 23 பேர் 100 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 69 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளன. யாரும் தமிழ் மற்றும்  ஆங்கிலத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. கடந்த கல்வி ஆண்டியில் 181 மாணவ, மாணவிகள் 100-க்கு 100  மதிப்பெண்கள் பெற்று இருந்தன. ஆனால் இந்த கல்வி ஆண்டியில் 106 மாணவ,  மாணவிகள் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

Tags : primary education officer ,examination ,SSLC ,
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...