×

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் மீன்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை

மணமேல்குடி, ஏப்.30: புதுக்கோட்டைமாவட்டத்தில் கோட்டைப்படினம், ஜெகதாப்படினம் பகுதியில் மீன்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுகை மாவட்டம் ஜெகதாபட்டினம் கோட்டைப்படினம் ஆகிய இடங்களில் மீன்படி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை 2000க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும்  நாட்டுப்படகுகள் மூலம்  15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர் மீன்படிதடை காலம் கடல் சீற்றம் இலங்கை கடற்படையினரின் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை கடந்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். சில நேரங்களில் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கும்.

சில நேரங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மீன்வரத்து இருக்காது. எதிர்பார்த்தபடி மீன்கள் வலையில் சிக்காததால் மீனவர்கள் கவலை அடைந்து வருகின்றனர். கடலில் இருந்து படித்துவரும் மீன்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு இல்லாததால் உடனே விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுகிறனர். இதனால் கிடைத்த விலைக்கு மீன்களை நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் மீன்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு வசதியை அரசு ஏற்படுத்திதர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீனவர்கள் படித்துவரும் மீன்கள், இறால், நண்டு, கனவாய் போன்றவை பிறமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி மதியம் 12 மணமிக்கு மேல் ஆகி விடுகிறது. இதன் பிறகு இறால் நிறுவனங்களுக்கும், மீன்வியாபரிகளுக்கும் விற்பனை செய்ய வேண்டும். இங்கு குளிர் பதன கிடங்கு இல்லாததால் கரைக்கு வந்த சிலமணிநேரத்திலேயே அனைத்தையும் விற்றுவிடவேண்டும் இல்லை யென்றால் கெட்டுபோய்விடும். இதனால் லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று கிடைத்த விலைக்கு அனைத்தையும் விற்று வருகிறோம் என்றார்.

Tags : warehouse ,area ,Jagadapattinam ,Kotte ,
× RELATED தடைகாலம் நீடிப்பதால் மீன்கள் வரத்து குறைவு… விலை கிடுகிடு உயர்வு…