×

மாநில வலுதூக்கும் போட்டி பட்டுக்கோட்டை அரசு பள்ளி மாணவி சாதனை

பட்டுக்கோட்டை, ஏப். 30: மாநில வலுதூக்கும் போட்டியில் பட்டுக்கோட்டை அரசு பள்ளி மாணவி சாதனை படைத்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வஉசி விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் வலுதூக்கும் போட்டி நடந்தது. 800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று 52 கிலோ உடல் எடைப்பிரிவில் பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி சந்தியா, 205 கிலோ எடை தூக்கி சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற தம்பிக்கோட்டை சேர்ந்த கல்பனா, 57 கிலோ உடல் எடைப்பிரிவில்  215 கிலோ எடை தூக்கி  ஜூனியர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.


53 கிலோ எடைப்பிரிவில் உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12 ம் வகுப்பு மாணவர் முருகேசன் 4ம் இடமும், அலிவலம் எஸ்இடி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர் அஜீஸ்ரகுமான் 4ம் இடமும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஹரிஹரன், ஆகாஷ் ஆகியோர் 4ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். இவர்களை தொழிலதிபர் வேலாயுதம், பட்டுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்க தலைவர் கைலாசம், தஞ்சை மாவட்ட வலுத்தூக்கும் சங்க செயலாளர் ஜலேந்திரன், வழக்கறிஞர் அண்ணாதுரை, அகில இந்திய வலுத்தூக்கும் வீரர் ரவிச்சந்திரன், தஞ்சை மாவட்ட ஆணழகன் சங்க சட்ட ஆலோசகர் ராஜ்குமார், உலக வலுதூக்கும் வீராங்கனை லோகபிரியா, ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் இலக்கியா ஆகியோர் பாராட்டினர்.

Tags : Pattukottai ,
× RELATED பட்டுக்கோட்டை சிறுவன் கொரோனா வைரஸ்...