×

சாரங்கபாணி கோயிலில் விடையாற்றி விழா 3 பெருமாள் சுவாமிகள் புஷ்ப பல்லக்கில் வந்தனர்

கும்பகோணம், ஏப். 30: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை பெருவிழா விடையாற்றி விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு மூன்று கோயில்களின் பெருமாள் சுவாமிகள்  புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடநதது. 108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தாற்போல் சிறந்த தலமாக கும்பகோணம் சாரங்கபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21ம் தேதி சித்திரை தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் (28ம் தேதி) வரை நடந்த விழா நாட்களில் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடநதது. இந்நிலையில் விடையாற்றி விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதைெயாட்டி சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய பெருமாள்கள் மூன்று புஷ்ப பல்லக்கில் தனித்தனியாக வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Festival ,Perumal Swamikal ,Pushpa Palghi ,Sarangapani Temple ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!