×

10ம் வகுப்பு தேர்வில் கும்பகோணம் ஏஆர்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை

கும்பகோணம், ஏப். 30: கும்பகோணம் ஏஆர்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் இப்பள்ளியி–்ல் 211 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 210 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பள்ளி அளவில் மாணவன் சஞ்சய்பாரதி 485 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவன் ஹர்சத் 480 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி மாலினி 478 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். தமிழில் 97 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 98 மதிப்பெண்களும், அறிவியலில் 99 மதிப்பெண்களை 2 மாணவர்களும், சமூக அறிவியலில் 99 மதிப்பெண்களை 2 மாணவர்களும் பெற்றனர்.

பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தால் மேல்நிலை முதலாமாண்டு சேர்க்கையும், 485 மதிப்பெண்களுக்கு மேல் 100 சதவீதமும், 480 முதல் 484 மதிப்பெண்களுக்கு 75 சதவீதமும், 470 முதல் 479 மதிப்பெண்களுக்கு 50 சதவீதமும் கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களை பள்ளி தாளாளர் , செயலாளர், அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : ARR Metric Higher Secondary School ,Kumbakonam 10th Class Examination ,
× RELATED விவசாயிகள் வலியுறுத்தல் தஞ்சாவூரில் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு