×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

முத்துப்பேட்டை, ஏப்.30: முத்துப்பேட்டை கிழக்குகடற்கரை சாலை  வழியாக ஆலங்காடு  பகுதிக்கு மணல் கடத்தி திருடப்பட்டு வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்  ராஜேஷ் தலைமையில் போலீசார் ஆலங்காடு பைபாஸ் சாலையில்  முகாமிட்டு  கண்காணித்து வந்தனர். அப்போது பட்டுக்கோட்டை  சாலையிலிருந்து ஆலங்காடு  நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை  நடத்தினர். இதில் தம்பிக்கோட்டை பாமணி ஆற்றிலிருந்து மணல் திருடி கொண்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார்  லாரி டிரைவரான பட்டுக்கோட்டை பகுதியை  சேர்ந்த சக்தி மகன் செந்தில்குமாரை கைது செய்து  விசாரிக்கின்றனர்.

Tags : Sandy ,
× RELATED மதுராந்தம் அருகே லாரியில் கடத்தி...