×

டிடிவி தினகரனை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் பிரச்னையில் சட்டம் தன் கடமையை செய்யும் திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி

திருச்சி, ஏப். 30: டிடிவி தினகரனை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் பிரச்னையில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று திருச்சியில் ஜி.கே.வாசன் கூறினார்.
கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லாமம் இருக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக மேட்டூர் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டாலும், மக்களவை தேர்தலை காரணம் காட்டி முழுமை அடையவில்லை. இதனால் தமிழகத்திற்கு முழுமையான அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசு, அங்குள்ள அணைகளில் திருப்தியான அளவில் தண்ணீர் இருப்பதாக கூறியுள்ளனர். இதில் கே.ஆர் அணையில் 10 டிஎம்சி கூடுதலாக இருப்பு உள்ளது. ஆனால் மேட்டூர் அணையில் 54 அடி தண்ணீரில், 20 டிஎம்சி அளவில் உள்ளது. இதில் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக 7 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 13 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு தாராளமாக தண்ணீர் வழங்கலாம். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கு ஒதுக்கிய 20 டிஎம்சி தண்ணீரை கொடுக்க ஆணையம் வழிவகை செய்ய வேண்டும்.

இதனால் ஜூன் வரை குடிநீருக்கு பிரச்னை இல்லாமல் இருக்கும். மீண்டும் ஜூன் 12ல் குறுவை சாகுபடி, தண்ணீர் திறக்க வேண்டிய சூழலை உறுதிப்படுத்த வேண்டும். அண்மையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பில் தமிழக மாணவ, மாணவிகள் நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுதலாம் என்று உத்தவிட்டுள்ளது வரவேற்கதக்கது. குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர் மீது உச்சக்கட்ட தண்டனை வழங்க வேண்டும். இதன் பின்னணி கொண்டு வரப்பட வேண்டும்.இலங்கை வெடிகுண்டு தாக்குதல் மனிதாபமற்றது. இலங்கை அரசுக்கு உதவியாக இந்திய அரசு துணை நிற்கிறது. அங்குள்ள மக்களுக்கு இந்தியா உதவியாக இருப்பதாக கூறியுள்ளது. ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு பாராட்டுக்கள். டிடிவியை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டதில் சட்டம் தன் கடமையை செய்யும். சட்டமன்றத்தில் ஜனநாயகம் உயர்ந்த அமைப்பாக உள்ளது. இப்பிரச்னையை சட்டப்பிரச்னையாக பார்க்கிறேனே தவிர அரசியல் பிரச்னையாக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : GK Vasan ,Trichy ,DTV ,
× RELATED 7,700 செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்