×

போச்சம்பள்ளி பகுதியில் விளைச்சல் பாதிப்பால் மக்காச்சோளம் விலை உயர்வு

போச்சம்பள்ளி, ஏப்.30: போச்சம்பள்ளி பகுதியில் விளைச்சல் பாதிப்பால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது. போச்சம்பள்ளி பகுதியில் பரவலாக மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். ஜம்புகுடப்பட்டி, ஜீம்மாண்டியூர், திருவயலூர், மைலம்பட்டி, புளியம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான உணவு பொருட்களில் முக்கிய பங்காற்றும் மக்காச்சோளத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், போதிய மழை இல்லாததால் போச்சம்பள்ளி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. உரிய விளைச்சல் இல்லாததால் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மக்காச்சோளம் பயிரிட ஏக்கருக்கு ₹15 ஆயிரம் வரையிலும் செலவாகிறது. 3 முதல் 4 டன் வரையிலும் மகசூல் கிடைக்கும். கடந்தாண்டு நல்ல விளைச்சல் காரணமாக டன் ₹25 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால், நஷ்டமே மிஞ்சியது. ஆனாலும் விவசாயத்தை விடமுடியாமல் வேறு வழியின்றி வந்த விலைக்கு விற்பனை செய்து வந்தோம். தற்போது, வறட்சியின் காரணமாக மக்காச்சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. டன் ₹50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

Tags : area ,Pochampalli ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...