×

பானி புயல் எச்சரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

திருப்பூர்,ஏப்.28: பானி புயல் கரையை கடக்கும் நாட்களில்  திருப்பூர் மாவட்டத்தில் மழை, இடி மற்றும் மின்னல் தாக்குதலின் போது  பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்  கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பொதுமக்கள் மழைக்காலங்களின் போது வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடனும், மழை பெய்யும் பொழுது திறந்த வெளியில் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பாதுகாப்பான கட்டிடங்கள் அல்லது அரசு முகாம்கள் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆறு, குளம், கால்வாய் போன்ற மழைநீர் செல்லும் பாதைக்கு அருகே வசித்து வரும் பொது மக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.  மழை காலங்களில் நீர் நிலைகளில் குளிப்பது, துவைப்பது போன்ற செயல்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்ககூடாது. தமிழ்நாடு பேரிடர் துயர் குறைப்பு முகமை மூலமாக காலநிலைகள், வானிலை நிலவரங்கள், மழைப்பொழிவுகள் உள்ளிட்ட தகவல்களை பெறும் வண்ணம் தமிழக அரசினால் டி.என்.எஸ்.மார்ட் என்ற பெயரில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த செயலியினை பயன்படுத்தி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிடும்  அதிகாரப்பூர்வ பேரிடர் விழிப்புணர்வு அறிக்கைகள்,மழை,வெள்ளம்,புயல் மற்றும் வெயில் போன்ற காலநிலைகள் குறித்தும் மழைப்பொழிவு நிலவரம் மழையினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் செயற்கைகோள் புகைப்படங்கள் போன்றவைகளை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.மேலும் பொதுமக்கள் மேற்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும் பானி புயல் காலத்தின் போது, மழை, இடி மற்றும் மின்னல் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : Bani ,civilians ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை