×

துறையூர் அருகே மண் கடத்தல் தகவல் கொடுத்தவர் உறவினர்களை வீடுபுகுந்து தாக்குதல் கலெக்டரிடம் புகார் மனு

துறையூர், ஏப்.28:  துறையூர் அருகே மண் கடத்தல் பற்றி புகார் அளித்தவரின் உறவினர்களை தாக்கியவர்கள் மீதும் அதற்கு காரணமான அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.  துறையர் அருகே ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(28), லாரி உரிமையாளர். அதே ஊரைச் சேர்ந்த விருத்தாசலம் என்பவர் கடந்த 10 வருடத்திற்கு மேல் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். இவர்  தனது செங்கல் சூளைக்கு உரிய அனுமதியின்றி மண் அள்ளியதாகக் கூறப்படுகிறது. அப்போது அதை செந்தில் என்பவர் போட்டோ, வீடியோ எடுத்து வருவாய்த்துறையினருக்கு போனிலும் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் செய்துள்ளார். அதை விசாரிக்க வந்த துறையூர் ஆர்ஐ மணிவாசகம் தகவல் தந்தவர் பற்றிய விவரங்களை மண் அள்ளியவரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த விருத்தாசலம், செந்தில் வீட்டிற்கு சென்று அவர் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த செந்திலின் பெரியப்பா மகன் சுப்பிரமணி (45), தாயார் லட்சுமி (50), அம்மாயி சின்னபிள்ளை (72) ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 3 பேரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்கியவர்கள் மீதும் அதற்கு காரணமான ஆர்ஐ மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி உப்பிலியபுரம் போலீசுக்கும், கலெக்டருக்கும் செந்தில் நேற்று முன்தினம் இரவு புகார் மனு அனுப்பினார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : mud kidnapping ,Thuraiyiru ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி