×

புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் செஸ் போட்டி

புதுக்கோட்டை, ஏப்.28: புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 120 பேர் கலந்து கொண்டனர்.
இதில் 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. போட்டி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. இதில் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : Chess tournament ,Pudukottai ,
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி