×

மீன்சுருட்டி அருகே வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்,ஏப்.28: ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டி அருகே இருவேறு சமூகத்தினரிடையே குரோதத்தை ஏற்படுத்தி கலவரம் ஏற்படும் நிலையில் அவதூறாக  வாட்ஸ்அப்பில் பரப்புரை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்தனர்.பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தை யடுத்து,சாதி கலவரங்களை ஏற்படுத்தும் விதத்தில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் நேற்று காலை அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலணிக்குழி கடைவீதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சின்னதுரை ( 29) என்பவர் தனது வாட்ஸ்அப்பில் தனது சமூகத்தினர் பெண்களையும் இழிவாக பேசிய மற்றொரு சமூகத் தலைவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இனவெறியை தூண்டும் வகையில் பரப்புரை செய்ததால், இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்படும் நிலையில் உள்ளது என்று கூறி, குண்டவெளி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மினிடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மாலைச்சாமி வழக்கு பதிவு செய்து சின்னதுரை என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Vatts ,Vishu Purdue ,
× RELATED கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து...