விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க மே 7ம்தேதி கடைசி

அரியலூர், ஏப்.28: அரியலூரை சேர்ந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும்  மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற மே 7ம் தேதி கடைசிநாளாகும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய  28 விளையாட்டு விடுதிகள், 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்விடுதிகளில் நடப்பாண்டிற்கான மாணவ, மாணவியர்கள்  சேர்க்கை நடைபெற்று வருகிறது. விளையாட்டு விடுதிகளில் பின்வரும் விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளில் மாணவ , மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 9.5.2019 அன்று காலை 7 மணிக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான விளையாட்டுக்கள்:

தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து,ஹாக்கி நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளூதூக்குதல், கபடி, மேசைப்பந்து, டென்னிஸ்,ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தையும்,  மாணவியர்களுக்கான விளையாட்டுகள்: தடகளம்,இறகுப்பந்து,கூடைப்பந்து, குத்துச்சண்டை,கால்பந்து,வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளூதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜுடோ.இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர்கள், அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ராஜாஜி நகர்,அரியலூர் என்ற முகவரிக்கு வரும் 7.5.2019க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7401703499 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமார் ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : sports Hostels ,
× RELATED மருத்துவ சேர்க்கை இடஒதுக்கீட்டில்...