அதிமுகவில் இணைந்த அமமுகவினர்

சிவகாசி, ஏப். 28: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், வத்திராயிருப்பு அமமுக எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலாளர் கண்னன், ஒன்றியப் பிரதிநிதிகள் காளிமுத்து, கே.புதூர் முத்துச்சாமி உட்பட 50 பேர், அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர். இந்த நிகழ்வின்போது எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் மயில்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் தங்க முனியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED மேஷ ராசி பணியாள்