×

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ‘பானி’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

ஆண்டிபட்டி, ஏப்.28: வரவிருக்கின்ற பானி புயலை எதிர்கொள்வதற்காக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் முன் எச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 30, 31 மே 1ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பானி புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில்  ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஊராட்சி செயலாளர்களுக்கான ‘ரெட் அலார்ட்’ சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பானி புயலால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்.

அதற்கு முன் எச்சரிக்கையாக கயிறு, மண்வெட்டி, கத்தி, கடப்பாறை, மணல் மூடைகள் உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜகோபாலன்பட்டி ஊராட்சியினர் மணல் மூட்டைகளை தயார் செய்தனர். இதேபோன்று மரிக்குண்டு ஊராட்சியில் நீர்வரத்து ஓடையை தூர்வாரியும், மணல் மூட்டைகளை கட்டி தயார் நிலையில் வைத்தனர். இதனை உதவி இயக்குனர் ஊராட்சிகள் முருகன் மற்றும் ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன் பார்வையிட்டனர்.

Tags : storm ,Bani ,area ,Antibiotic Panchayat Union ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...