×

டிஜிபி உத்தரவுப்படி ரகசிய கண்காணிப்பில் மதுரை ரயில் நிலையம்

மதுரை, ஏப். 28: தமிழக ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு  உத்தரவுப்படி, மதுரை ரயில் நிலையம் ரகசிய கண்காணிப்பில் உள்ளதாகவும், 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருப்பதோடு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த விபரம், மேல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உடனடி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஆலோசனைப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும், மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையிலிருந்து புறப்படும் மற்றும் மதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும், வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் அனைத்துப்பிரிவு காத்திருப்பு பகுதிகள், தண்டவாளப்பகுதி, நடைமேடை பாலங்கள், ரயில்வே வளாகப்பகுதி என அனைத்துப்பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே மதுரை ரயில் நிலையம் நேற்று காலை முதல் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

Tags : Madurai ,railway station ,DGP ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...