‘நமது குப்பை, நமது பொறுப்பு’ தலைப்பில் துப்புரவு ஊழியர்கள் ஆலோசனை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், புழல் 23வது வார்டு பகுதியில் துப்புரவு பணியாளர்கள், கொசு மருந்து அடிப்பவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாதவரம் மண்டல அலுவலர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது ஊழியர்களிடம் ‘‘நமது குப்பை, நமது பொறுப்பு’’ என்ற தலைப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், சாலையில் குப்பைகள் தேங்காமல் இருக்கவும், அவற்றினால் நோய்கள் பரவுவதை தடுக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மண்டல அலுவலர் அறிவுறுத்தினார். மேலும், குப்பைகள் இல்லாத வார்டாக திகழ அனைவரும் பாடுபட வேண்டும் என குறிப்பிட்டார். இதில் வார்டு பொறியாளர் அரிபாபு, துப்புரவு மேற்பார்வையாளர் தணிகைவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

× RELATED மெட்ரோ ரயில் நிலையங்களில் குப்பை...