×

பாவூர்சத்திரம் வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கல்

பாவூர்சத்திரம், ஏப். 28:  பாவூர்சத்திரம் எம்எஸ்பி வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி உதவித்தொகை மற்றும் வாரியத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
கல்லூரித் தாளாளர் எம்.எஸ்.பி.வி. காளியப்பன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ராஜேஷ் சங்கரகுமார் முன்னிலை வகித்தார். இயந்திரவியல் துறைத் தலைவர் ஆல்பர்ட்  வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்லூரி முன்னாள் மாணவரான செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., மாணவ, மாணவிகளுக்கு கல்வித் உதவித்தொகையும், வாரியத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கிப் பேசினார். விழாவில் கடந்த 1986- 89ம் கல்வியாண்டில்  பயின்ற அனைத்துத் துறை மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர்.
 ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தலையில் அனைத்துத் துறை தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Pallurcadir Velayutha Nadar Lekshmi Thiyammal ,
× RELATED பைக்கிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ஜி.ஹெச். ஊழியர் சாவு