×

திருமணம் செய்து கொள்ள மறுப்பு காதலியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பூட்டிய காதலன் குடியாத்தம் அருகே பரபரப்பு

குடியாத்தம், ஏப்.28: குடியாத்தம் அருகே திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலியை வீட்டிற்கு அழைத்து சென்று காதலன் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை, புத்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வின்(26). அதே பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் தனியார் தோல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளம்பெண் அஸ்வினை திருமணம் செய்துக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அஸ்வின் நேற்று மதுபானம் அருந்திவிட்டு குடிபோதையில் இளம்பெண்ணை அவருக்கு சொந்தமான வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளே வைத்து கதவை பூட்டி அடைத்து வைத்துள்ளார். இதையறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பான புகாரை வாங்க காவல் நிலையத்தில் இருந்த போலீசார் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : lover ,house ,Gudiyatham ,
× RELATED யாஷிகாவின் ரகசிய காதலன்