×

திருவண்ணாமலையில் காய்கறிகள் விலை கிடு, கிடு உயர்வு ஒரு கிலோ பீன்ஸ் ₹100 க்கு விற்பனை பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை, ஏப்.28: திருவண்ணாமலையில் காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. ஒருகிலோ பீன்ஸ் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
திருவண்ணாமலையில் தோட்டப்பயிர்களின் சாகுபடி குறைந்த அளவே நடைபெறுகிறது. கத்திரி போன்ற ஒரு சில காய்கறிகள் மட்டும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பயிரிடப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன.பெரும்பாலான காய்கறிகள் தினசரி வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் திருவண்ணாமலைக்கு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் காய்கறிகளின் விலைகள் கிடு கிடு வென உயர்ந்துள்ளது. ₹20க்கு விற்பனை செய்யப்பட்ட அவரை தற்போது ₹40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ₹40க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ பீன்ஸ் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. காரட் பீட்ருட் ஒருகிலோ 40க்கும், பீர்க்கங்காய் ₹50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பருவ மழை பொய்த்து விட்டது.அதனால் காய்கறிகளின் விலையும் உயர்ந்து விட்டது. பொதுவாக திருமணம் போன்ற விசேஷ நாட்களில்தான் காய்கறிகளின் விலை உயரும். ஆனால்தற்போது போதிய விளைச்சல் இல்லாததால் பெங்களூர், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்து விட்டது. அதனால்தான் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. மழை வந்தால் காய்கறிகள் விலை குறைய வாய்ப்புள்ளது. மழை வராவிட்டால் காய்கறிகளின் விலை இன்னும் உயரும். காய்கறிகளின் வரத்து குறைவினால் எங்களுக்கும் வியாபாரம் சற்று பாதிப்புதான்.
இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

Tags : Tiruvannamalai ,Kid ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...