×

உறுதி மொழியை மீறிய வாலிபருக்கு 217 நாள் சிறை

ஆவடி, ஏப். 28: போலீசாரிடம் கொடுத்த உறுதி மொழியை மீறிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையை அடுத்த திருவேற்காடு, சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் மீது ஆவடி போலீசில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தினேஷ் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க, அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் ஆவடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தினேஷ் ‘ஒரு வருடத்துக்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன்’ என உறுதிமொழி பிரமாண பத்திரம் எழுதிக்கொடுத்தார். ஆனால், கடந்த 14ம் தேதி தினேஷும் அவரது நண்பர் சங்கர் என்பவரும் சேர்ந்து குடிபோதையில் தனியார் நிறுவன ஊழியர் பிரவீன்குமார் (24), ஆட்டோ டிரைவர் அன்சாரி (23) ஆகியோரிடம் பணம் கேட்டு தாக்கியுள்ளனர்.

இருவரும் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ், சங்கர் ஆகியோரை ஆவடி  இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தினேஷ் மீறியதாக புழல் சிறையில் இருந்து ஆவடி உதவி கமிஷனர் ஜான்சுந்தர் உத்தரவின்பேரில், நேற்று முன்தினம்  போலீசார் காவலில் எடுத்து வந்தனர். பின்னர் அவரை துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர், உறுதிமொழியை மீறியதாக தினேஷுக்கு 217 நாட்கள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து தினேஷை மீண்டும் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...