×

தொம்பரம்பேடு பைரவர் கோயிலில் அஷ்டமி விழா

ஊத்துக்கோட்டை, ஏப். 28: தொம்பரம்பேடு கிராமத்தில்  மகாகால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா  நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில்  மகா கால பைரவர் கோயிலில் நேற்று சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களுக்கும், கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வெள்ளி கவசம் அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Tags : Ashtami Festival ,Thambampambu Bhairava Temple ,
× RELATED லாரி திருட்டு; 2 பேர் கைது