ரோகிணி பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

அஞ்சுகிராமம், ஏப். 28: அஞ்சுகிராமம் அருகே உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் நீலமார்த்தாண்டன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் டாக்டர் நீலவிஷ்ணு மற்றும் முதன்மை நிதி அதிகாரி டாக்டர் பிளஸ்ஸி ஜியோ முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஷ் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக, கூடங்குளம் அணுமின் நிலைய மகளிர் கிளப் தலைவர் சுடாடக் சஞ்சய்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் வளர்க்க வேண்டிய தகுதிகள், பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மூத்த மேலாளர் தேவபிரகாஷ் மற்றும் வேல்மயில் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். கருத்தரங்கில் கூடங்குளம் பெண்கள் கிளப் உறுப்பினர்கள், சமுதாய விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான மாணவ. மாணவியர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More