×

கிரிக்கெட் வீரர்களுக்கு இலவச பயிற்சி முகாம்

கடலூர், ஏப். 28:  கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன், செயலர் கூத்தரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் இலவச பயிற்சி முகாம் வருகிற 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை கடலூர் அண்ணா விளையாட்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கலாம். தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த முகாமில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் பழனியப்பன் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார். பயிற்சிக்கு வரும் வீரர்கள் வெள்ளை நிற உடையும், வெள்ளை நிற காலணியை அணிந்து வர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : training camp ,cricketers ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி