×

ஆவடி வேல்டெக் ஹைடெக் கல்லூரிக்கு க்யூ.எஸ் தேசிய தர நிர்ணய விருது

திருவள்ளூர், ஏப். 26: க்யு.எஸ் ஐ-காஜ் தர நிர்ணயம், இந்திய அளவில் வெற்றிகரமாக செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழாவை பெங்களூருவில் நடத்தியது. இதற்கு க்யு.எஸ் உலகளாவிய தர நிர்ணய அமைப்பின் நிறுவனர் நுன்சியோ குவாக்குரேலி தலைமை தாங்கினார். தலைமை செயலாக்க அதிகாரி அஸ்வின் பெர்ணான்டஸ் முன்னிலை வகித்தார். விழாவில், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள்,  தாளாளர்கள் கலந்து கொண்டனர். தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினரால் ‘ஏ’ தரம், 3.27 மதிப்பெண் மற்றும் தேசிய தரச்சான்று அவையினராலும்  அங்கீகரிக்கப்பட்டது.

ஆவடி வேல்டெக் ஹைடெக் கல்லூரி அனைத்து செயல்பாடுகளையும், புள்ளி விவரங்களையும் க்யூ.எஸ் ஐ-காஜிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் க்யூ.எஸ் ஐ-காஜ் நிர்ணயித்த ஐந்து அளவுகோல்களில் ‘‘வைரம்’’ தரமும், கல்லூரி ஒட்டு மொத்த அளவில் ‘‘தங்கம்’’ தரமும் பெற்றது. இதனை தொடர்ந்து க்யூ.எஸ் நிறுவன தலைமை செயலாக்க அதிகாரி அஸ்வின் பெர்ணான்டஸ் வேல்டெக் ஹைடெக் கல்லூரிக்கு விருதினை வழங்க  கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஆர்.மகாலட்சுமி கிஷோர் மற்றும் கல்லூரி முதல்வர் இ.கமலநாபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஆவடி வேல்டெக் ஹைடெக் பொறியியல் கல்லூரி வேல்டெக் கல்வி குழுமங்களின் நிறுவனர்கள் ஆர்.ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா ரங்கராஜன் ஆகியோரால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Avadi Veltech ,
× RELATED திருவள்ளூரிலிருந்து தாம்பரம் வழியாக...