×

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ தேரோட்டம்

பொன்னேரி, ஏப். 26: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கரிகால சோழ மன்னனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதாக கூறப்படும் பிரசித்தி பெற்ற அருள்மிகு  சௌந்தரவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயில் உள்ளது.  இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் 10 நாள் பிரமோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி கடந்த 19ம் தேதி இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5ம் நாளான நேற்று முன்தினம் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சந்திப்பு வைபோகம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக 7ம் நாளான நேற்று கரிகிருஷ்ண பெருமாள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பூதேவி, தேவி சமேதராக கரிகிருஷ்ண பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  அப்போது பெரும் திரளான பக்தர்கள், ‘‘ஓம் நமோ நாராயணா’’ என்ற மந்திர சொல்லை உச்சரித்தபடி தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். பின்னர் தேர் தன்னிலை வந்தடைந்ததும் கரிகிருஷ்ண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 27ம் தேதி தெப்பத்திருவிழா நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chitra Brahmavasava ,Ponnari karikrishna Perumal ,
× RELATED முட்டுக்காட்டில் சுற்றுலா பயணிகளை...