×

குடிநீர், கழிப்பறை, இருக்கைகள், நிழற்கூரை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத நத்தப்போட்டை ரயில் நிலையம்

வாலாஜாபாத், ஏப்.26: வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள, நத்தப்பேட்டை ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் உள்பட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால், பயணிகள் கடும் மன உளைச்சல் அடைகின்றனர். இதனை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும் என பயணிகள் எதிர்ப்பாக்கின்றனர். வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டையில் இருந்து ராஜகுளம் வரை செல்லும் புறவழிச்சாலையில் நத்தப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து அய்யம்பேட்டை, களியனூர், முத்தியால்பேட்டை உள்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மின்சார ரயில் மூலம் தினமும்  சென்னை, செங்கல்பட்டு, அரக்கோணம், தாம்பரம், திருமால்பூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக இந்த ரயில் நிலையம் காலை, மாலை நேரங்களில் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வருவதால, பரபரப்பாக காணப்படும். ஆனால், இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, நிழற்கூரை, இருக்கைகள் இல்லாமல் உள்ளது. இதனால், வெயில் மற்றும் மழைக் காலங்களில் இங்கு வரும் பயணிகள், கடும் பாதிப்படைகின்றனர். இதையொட்டி, அங்குள்ள மரத்தடியில் தஞ்சமடைகின்றனர். மேலும், பயணிகள் தங்களின் பயணச்சீட்டை நடைபாதையின் எதிர்ப்புறம் உள்ள கவுன்ட்டரில் பெற்று, மீண்டும் தண்டவாளத்தை கடந்து நடை நடைமேடைக்கு வரும் ஆபத்தான நிலை
உள்ளது.

இதில், வயதானவர்கள் பயண சீட்டு பெற்று கொண்டு இந்த ரயில் பாதையை கடந்து, 3 அடி உயரமுள்ள நடைமேடையில் ஏறும்போது கடும் சிரமம் அடைகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த தடத்தில் தினமும் 10க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்று வந்தன.  தற்போது, 20க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வேளையிலும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததால், பொதுமக்கள் மன உளைச்சல் அடைகின்றனா். எனவே ரயில்வே நிர்வாகம், நத்தப்பேட்டை ரயில் நிலையத்தில் எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதர உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Nattapottai Railway Station ,facilities ,cabins ,
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...