×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் எதிரே புதர் மண்டி கிடக்கும் வசந்த உற்சவ தோட்டம்

திருப்போரூர். ஏப்.26: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் வசந்த உற்சவ தோட்டம் புதர் போல் மண்டி கிடப்பதால், கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான வசந்த உற்சவ தோட்டம் கிழக்கு மாடவீதி மற்றும் நெம்மேலி சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மண்டபத்தில், ஆண்டுக்கு ஒரு முறை கந்தசுவாமி, எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும். கோயில் நிர்வாகத்தினால் பராமரிக்கப்படும் ேதாட்டத்தில், தற்போது சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர் போல காட்சி அளித்தது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், இந்த வசந்த உற்சவ தோட்ட வளாகம் சீரமைக்கப்பட்டு 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், பூங்காவை போல் அழகாக வடிவமைக்கப்பட்டு மயில், யானை உள்ளிட்ட விலங்குகளின் சிலைகளும் அமைக்கப்பட்டன. இந்த தோட்ட வளாகத்திலேயே கிணறும், மின் மோட்டாரு உள்ளது. ஆனால், கோயில் ஊழியர்கள் இந்த தோட்டத்தை சரிவர பராமரிப்பதில்லை.

இதனால், கோயில் நிர்வாகம் சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் வளராமல் காய்ந்து விட்டன. அதில், புல், பூண்டுகள் முளைத்து புதர்போல் காட்சி அளிக்கின்றது. மேலும், அழகுக்காக அமைக்கப்பட்ட புற்கள் கடும் கோடை வறட்சியால் காய்ந்துவிட்டன. அண்மையில் வசந்த உற்சவம் நடைபெற்று முடிந்த நிலையில், கோயில் ஊழியர்கள் இந்த வசந்த தோட்ட வளாகத்தை கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, வளாகத்திலேயே கிணறு மற்றும் மின் மோட்டார் இருந்தும் இந்த தோட்டத்தை ஊழியர்கள் பராமரிக்காமல் இருப்பதால், பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  எனவே, கோயில் நிர்வாகம் சார்பில் இந்த வசந்த உற்சவ தோட்ட வளாகத்தை பசுமையுடன் பராமரிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : garden ,temple ,Kandaswamy ,
× RELATED திருப்போரூர் திறந்தநிலையில் கந்தசாமி...