×

பயணிகள் அவதி வாட்ஸ்அப்பில் அவதூறு கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம்

தேனி/ வருசநாடு, ஏப்.25: வாட்ஸ்அப்பில் அவதூறாக பேசியதை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக 2ம் நாளாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் பிச்சைமணி தலைமை வகித்தார். கார்மேக பூசாரி முன்னிலை வகித்தார். இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வாட்ஸ் அப்பில் அவதூறாக பேசியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஆவேசமடைந்த பெண்கள் கையில் துடைப்பத்தை வைத்து தரையில் அடித்து தவறாக பேசியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதேபோல் கடமலை மயிலை ஒன்றியத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புத்துறை, ஆட்டுப்பாறை, ஆத்துக்காடு, து.வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், மஞ்சனூத்து, அரசரடி போன்ற பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடமலைக்குண்டுவில் சாலை மறியல் செய்தனர். உப்புத்துறை பூசாரி கருப்பசாமி மற்றும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சின்னகாளை, சமுதாய முக்கியஸ்தர் அனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Passenger ,Attacks Watts ,office ,scam collector ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...