×

உதவி தேவைப்படுவோரை காப்பாற்ற முடியாத அவலம் வாகன விபத்துக்களை தடுக்க புதிய சென்சார் கண்டுபிடிப்பு

தேனி, ஏப்.25: வாகனங்கள் பின்னோக்கி செல்லும்போது விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் புதிய ரக சென்சாரை தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளனர். வாகனத்தை பின்னோக்கி ஓட்டும்போது விபத்தை தவிர்க்க தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் புதிய சென்சார் தயாரித்துள்ளனர். கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் ராஜேஸ்பிரபு, யோகேஸ்வரன், சிவக்குமார், வில்வேஷ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த புதிய ரக சென்சாரை கண்டுபிடித்துள்ளனர்.

மாணவர்கள் கூறுகையில், ‘‘வாகனங்களின் பின்புறத்தில் நாங்கள் தயாரித்த அல்ட்ராசோனிக் சென்சார் பொருத்தலாம். அல்ட்ராசோனிக் சென்சார் என்பது வண்டியின் பின்பகுதியில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் தடைகளை கண்டறியும் திறன் கொண்டது. அதன்முன் எந்தவொரு பொருளோ, உலோகமோ, மனிதன், விலங்கு அல்லது வேறு ஒரு வாகனங்கள் (5 கிமீ தூரம்) குறிப்பிட்ட தூரத்தில் இருந்தால் அதனை சென்ஸ் செய்து எக்கோ என்ற ஆர்டினோ போர்டு மூலம் கண்ட்ரோல் யூனிட்டுக்கு தெரியப்படுத்தும். கண்ட்ரோல் யூனிட் கம்ப்ரசர் மூலம் சோல்நாய்டு வேல்யு உதவியுடன் பிஸ்டனுக்கு சென்று பிரேக் வேலை செய்யும்.  இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

எங்கள் கண்டுபிடிப்பின் மூலம் 95 சதவீதம் விபத்துக்களை தவிர்க்க முடியும். இந்த  முயற்சிக்கு கல்லூரி முதல்வர் நாகரத்தினம் மற்றும் உதவி ஆய்வாளர் பாண்டீஸ்வரன் உதவியாக இருந்தனர்’’ என்றனர். புதிய சென்சாரை கண்டுபிடித்த மாணவர்களை தேனி கம்மவார் சங்கம் தலைவர் நம்பெருமாள், பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி, செயலாளர் சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் நாகரத்தினம், துணை முதல்வர் ராஜ்நாராயணன், துறைத் தலைவர் பாண்டி, அருண்பிரசாத் மற்றும் வகுப்பு பேராசிரியர் தீர்க்கதரிசனம் ஆகியோர் பாராட்டினர்.

Tags :
× RELATED கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்