×

நீராதாரமும் பாதிப்பு நத்தம் அருகே முன்விரோதத்தில் மோதல் இரண்டு பேர் கைது

நத்தம், ஏப். 25: நத்தம் அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் பிறவி (65). இவரது மகன் ரமேஷ் (43). இவர்களுக்கும் அதே ஊரை சேர்ந்த பெரியஎழுவன் (23), பூமிராஜ் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ நாளன்று ஏற்பட்ட தகராறில் பிறவி, ரமேஷ் இருவரும் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த ரமேஷ் நத்தம் அரசு மருத்துவமனையிலும்,  பிறவி மதுரை அரசு மருத்துமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியஎழுவன், பூமிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags : conflict ,waterfall ,Natham ,
× RELATED குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைவு