×

எரிசாராயம் கடத்திச்சென்ற மினிவேன் கவிழ்ந்தது எஸ்பி விசாரணை


திருவண்ணாமலை, ஏப்.26: திருவண்ணாமலை அருகே எரிசாராயம் கடத்திச்சென்ற, மினிவேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த எஸ்பி சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.திருவண்ணாமலை அடுத்த கெங்கம்பட்டு ஏரிக்கரை அருகே நேற்று, மினிவேன் ஒன்று லோடுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த பிளாஸ்டிக் கேன்கள் சாலையில் சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வேன் அருகே சென்று பார்த போது கேன்களில் எரிசாராயம் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து உடனடியாக திருவண்ணாமலை தாலுகா போலீசார், கலால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், விரைந்து வந்த கலால் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தாலுகா இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர். மேலும், தகவலறிந்த எஸ்பி சிபிசக்கவர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.விசாரணையில், மினிவேனில் சரக்கு மூட்டைகள் ஏற்றி வருவது போன்று, பிளாஸ்டிக் தார்பாய் போர்த்தி மறைத்து, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கேன்களில் எரிசாராயம் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கேன்களில் இருந்த 1,750 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மேலும், வாகன பதிவெண்ணை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், அதன் உரிமையாளர் ஒசூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது. அதன்பேரில், கலால் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : SBI ,corporation ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...