×

தண்டராம்பட்டு அருகே பாம்பாறு பகுதியில் மரங்கள் வெட்டிக்கடத்தல் அதிகாரிகள் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

தண்டராம்பட்டு, ஏப்.26: தண்டராம்பட்டு அருகே பாம்பாறு பகுதியில் அதிகாரிகள் துணையுடன், மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூர் கிராமம் வழியாக பாம்பாறு செல்கிறது. இந்த ஆற்றின் இருகரைகளிலும் வேப்பமரம், புளியமரம், வேலன், முருங்கை மரங்கள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், பாம்பாற்றின் அருகே வளர்ந்துள்ள மரங்கள் இரவு, பகலாக வெட்டி கடத்தப்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், `பாம்பாற்றின் கரையோரங்களில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. இங்குள்ள கிராம நிர்வாக அலுவலர், மர வியாபாரிகளிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு, அந்த மரங்களை வெட்ட அனுமதித்துள்ளார். மரவியாபாரிகளும் 20க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களை கொண்டு இரவு, பகலாக மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இதுகுறித்து தாசில்தார் மற்றும் தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை அவர்களும் உடந்தையாக இருக்கிறீர்களோ என சந்தேகம் உள்ளது. எனவே, பாம்பாற்றின் அருகே வளர்ந்துள்ள மரங்களை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும். உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'''' என்றனர்.

Tags : Citizens ,deaths ,area ,Dandarapattu ,Pampur ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...