×

கறம்பக்குடியில் காசாம்பு நீலமேனி கருப்பர் கோயிலுக்கு முளைப்பாரி எடுப்பு

கறம்பக்குடி, ஏப்.26:  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் காசாம்பு நீலமேனி கருப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி கோவிலில் காப்பு கட்டுதல் விழா தொடங்கியது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெற்றது. கறம்பக்குடி அக்ரகாரம் ,  தென்னகர் ,  குலக்காரன் தெரு ,  தட்டாவூரணி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தனர்.
முளைப்பாரி ஊர்வலம் கறம்பக்குடி முருகன் கோயில் அருகில் இருந்து புறப்பட்டது.  பெண்கள் முளைபாரிகளை தலையில் சுமந்து கொண்டு தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக சென்று கோயில் குளத்தில் விட்டனர். பின்னர் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் காசாம்பு நீலமேனி கருப்பர் மற்றும் கோயிலில் அமைந்துள்ள கொம்புக்காரன் போன்ற பரிவார தெய்வங்களுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கறம்பக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமான பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags : kalambuku neelamani kuppara temple ,
× RELATED உரிய நேரத்தில் தரமான உரம் கிடைக்கும்...