கறம்பக்குடி அருகே வீடு புகுந்து திருடிய பெண் கைது

கறம்பக்குடி, ஏப்.26: கறம்பக்குடி அருகே வீடு புகுந்து திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (54).  இவர் பல்லவராயன்பத்தை மின்வாரிய அலுவலகம் எதிரே வணிக நிறுவனங்கள் மற்றும் ரைஸ் மில்லும் நடத்தி வருகிறார். ரைஸ் மில் அருகே இவரது வீடும் அமைந்துள்ளது. இவரது குழந்தைகள் அனைவரும் வெளியூரில் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று சேகர் தனது மில்லில் நெல் அரைத்து கொண்டிருந்தார். சேகரின் மனைவி மஞ்சுளா பொருட்கள் வாங்க கறம்பக்குடிக்கு சென்றுள்ளார். ரைஸ் மில் அருகிலேயே இவர்களது வீடு இருப்பதால் வீட்டை பூட்டுவது கிடையாது. அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் திடீரென்று ஒரு பெண்மணி புகுந்து பீரோவை திறந்து அலசியுள்ளார்.

சேகர் திடீரென யாரோ ஒரு பெண் போவதென்று கூறி தனது  வீட்டில் ஓடி வந்து பார்த்துள்ளார்.  அப்போது உள்ளே நுழைந்த பெண்மணி பீரோவை திறந்து பொருட்களை திருட முயன்றபோது சேகர் கையும் களவுமாக அந்த பெண்ணை பிடித்துள்ளார். சேகர் உடனடியாக கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பெண்ணை ஒப்படைத்தார். கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை செய்ததில் வீடு புகுந்து திருடியதை ஒப்பு கொண்டார். அவரது பெயர்  ரேணுகாதேவி (53), தஞ்சாவூர் வண்டிக்காரதெருவை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Tags : house ,Karambukudi ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...