×

ஒட்டக்கோவில், கடுகூரில் கோடை உழவு, படைப்புழு கட்டுப்பாட்டு முகாம்

அரியலூர், ஏப்.26: அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில் கிராமம் சாளைக்குறிச்சி, தலையாரி குடிக்காடு கடுகூர், பொய்யூர் கிராமங்களில் கோடை உழவு, படைப்புழு கட்டுப்பாட்டு முகாம் நடந்தது. அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூவலிங்கம் கூறுகையில், மானாவாரி நிலங்களில் மண் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணை துகள்காள மாற்றுவதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விட உயிரியல் மருந்துகளான “பெவோஜீயா பேசியானா” மெட்டாரைசியம், பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் மற்றும் என்.பி.வைரஸ், டிரைகோகிரம்மா ஓட்டுண்ணி, பொறி வண்டுகள் போன்றவை படைப்புழுக்களை திறம்பட கட்டுப்படுத்துகின்றன.மக்காச்சோளம் பயிரிடும் முன்பு கோடை உழவு செய்வதன் மூலம் புழுக்களுக்கும்.  அந்தப்பூச்சிக்கும் இடைப்பட்ட மூன்றாம்கட்ட படைப்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. புடைப்புழுக்களை பறவைகளும், சிற்றுயிர்களும் இரையாக உண்கின்றது.
கோடை உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் அரிப்பை ஏற்பத்தி வேகமாக நிலத்தில் உருண்டோடி விடுகின்றன.

அறுவடை செய்யப்பட்டுள்ள வயல்களில் உள்ள அடித்தாள்கள், வேர்கள் முதலியவை கோடை உழவின்போது மடக்கி உழப்படுவதால் மண்ணின் அங்கச்சத்து அதிகரிக்கிறது. களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தின் சரிவுக்கு குறுக்காக வயலை நன்கு பலமுறை புழுதிபட உழ வேண்டும். இப்படி உழுவதால் மழைநீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ ஆழத்துக்கு உட்செல்லும். இதனால் நீர் ஆவியாவதை தடுப்பதோடு வறட்சி காலங்களில் பயிருக்கு தேவையான நீர் கிடைக்க ஏதுவாகிறது.
கோடையில் பெய்யும் மழைநீரை கொண்டு கோடை உழவு செய்து நிலத்தை பயன்படுத்துவதுடன் பயிர்களுக்கு அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் படைப்புழுக்களையும் கட்டுப்படுத்தி சாகுபடி பணிகளுக்கு விவசாயிகள் தயாராகலாம் என்றார். வேளாண் அலுவலர் சவிதா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பழனிசாமி, உதவி தொழில் நுட்பமேலாளர் சந்தரமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர் தேவி பங்கேற்றனர்.

Tags : Cuttack ,Orissa ,
× RELATED தெய்வச்செயல்