×

கரூர் தெரசா கார்னர் பகுதியில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால் மீது சிலாப் வைக்கப்படுமா?

கரூர், ஏப். 26: கரூர் தெரசா கார்னர் முதல் காந்திகிராமம் வரை சாலையோரம் திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால் மீது சிலாப் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூரில் இருந்து திருச்சி, மணப்பாறை, தரகம்பட்டி போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் காந்திகிராமம், புலியூர் வழியாக சென்று வருகிறது.இதில், சுங்ககேட் பகுதியில் இருந்து காந்திகிராமம் வரை வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக உள்ள காரணத்தினால், தெரசா கார்னர் பகுதி முதல் காந்திகிராமம் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தெரசா கார்னர் பகுதி முதல் காந்திகிராமம் வரை சாலையின் இருபுறமும் சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த பகுதிகளை சுற்றிலும் உள்ள அனைத்து தெரு மக்களும் பயன்படுத்தும் வகையில் இந்த சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த சாலையில் குறிப்பிட்ட து£ரம் வரை வடிகால் திறந்த நிலையில் உள்ளது. அவ்வப்போது, இரவு நேரங்களில் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாக்கடை வடிகாலுக்குள் விழுந்து காயமடைந்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனவே, திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால் மீது சிலாப் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இரண்டு ஆண்டுகளாக உள்ளது.ஆனாலும், இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, திறந்த பகுதிகளில் சிலாப் வைத்து மறைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Karur Theresa Corner ,
× RELATED ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் உணவு கிடைக்காமல் மக்கள் அவதி