×

உளுந்தூர்பேட்டையில் விபத்து தடுப்பு பிரதிபலிப்பான்கள்

உளுந்தூர்பேட்டை, ஏப். 25:  உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் ரோடு ரவுண்டானா, எ.சாத்தனூர் குறுக்கு ரோடு ஆகிய இடங்களில் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துகளால் பலர் உயிரிழந்தும், ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தும் வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் இந்த இரண்டு இடங்களிலும் விபத்து தடுப்பு அதி
நவீன பிரதிபலிப்பான்கள் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதனை விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் இயக்கி வைத்தார். தொடர்ந்து வாகன ஓட்டுநர்களிடம் விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரையில் 25 இடங்களில் விபத்து தடுப்பு அதிநவீன பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 இடங்களில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக இதுபோன்ற பிரதிபலிப்பான்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஒரு ஆண்டில் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.

Tags : Ulundurpet ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...