×

குமரியில் விழிப்புணர்வு ஊர்வலம் தொடர் சிகிச்சையால் ஆட்டிஸம் குறைபாட்டை சரி செய்ய முடியும் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்

நாகர்கோவில், ஏப்.25: தொடர் சிகிச்சையால் ஆட்டிஸம் குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிஸம் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி சார்பில், ஆட்டிஸம் விழிப்புணர்வு தின ஊர்வலம் நேற்று நடைபெற்றது.நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் இருந்து இந்த ஊர்வலத்தை, உதவி கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார்.  மருத்துவக்கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, ஆட்டிஸம் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் செந்தி அரசி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கோர்ட் ரோடு, கணேசபுரம் சந்திப்பு வழியாக ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் ஊர்வலம் முடிவடைந்தது. பின்னர் ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி கூறியதாவது :

ஆட்டிஸம் என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால், குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலக சிந்தனை குறைபாடு ஆகும். குழந்தை பிறந்து 3 வயது நிறைவடைவதற்கு முன் இக்குறைபாடு ஏற்படும். இக்குறைபாடு உடைய குழந்தைகளின் உடலில் எந்த விதமான குறைபாடும் இருக்காது. அவர்களின் நடத்தையிலேயே குறைபாடுகள் காணப்படும். ஆட்டிஸம் குறைபாட்டுக்கான காரணங்கள் கண்டறியப்பட வில்லை. கருத்தரித்த தாயின் வயது, கர்ப்ப காலத்தில் தாயின் ஆகாரம், தடுப்பூசிகள், கர்ப்பிணியின் உடல், மன ஆரோக்கியமின்மை, குறை பிரசவம்,  பிராண வாயு குறைபாடு, நச்சு பொருட்கள் போன்றவை ஆட்டிஸம் குறைபாட்டுக்கான காரணிகளாக கருதப்படுகிறது.
குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகியும் தாயின் முகம் பார்த்து சிரிக்காமல் இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்கள் ஆகியும் சப்தம் செய்யாமல் இருத்தல், 12 மாதங்களுக்கு பின் தனக்கு வேண்டியதை சுட்டி காட்டாமல் இருத்தல், கை அசைக்காமல் இருத்தல் போன்றவை இக்குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்.

இந்த வகை குறைபாட்டுக்கு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்கு சீரோதாரா, சிேராபிச்சு, சிரோலேபம், நஸ்யம், வஸ்தி என்று பெயர். இத்துடன் மேத்யம் என்றழைக்கப்படும் மூளையின் செயல்பாட்டை சீராக்கும் மூலிகைகளான ப்ரம்மி, வல்லாரை, சங்கு புஷ்பம், அதிமதுரம், சீந்தில் கொடி, வசம்பு போன்றவற்றை பொடி செய்தும் கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் சுமார் 30 குழந்தைகள் இது போன்ற பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளனர். 45 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்படும். பின்னர் 60 நாட்களுக்கு பின் மீண்டும் தொடர வேண்டும். ெதாடர் சிகிச்சையினால் ஆட்டிஸம் குறைபாட்டை சரி செய்ய முடியும். குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் உன்னிப்பாக கவனிப்பதன் மூலமே இந்த குறைபாட்டை அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kumari ,Ayurvedic Medical College ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...