×

கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

நாகர்கோவில், ஏப். 25:  கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சல்ய தந்திர பிரிவு சார்பில் புற்றுநோய் மற்றும் சல்ய தந்திர துறை சார்ந்த நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. முதல்வர் கிளாரன்ஸ் டேவி தலைமை வகித்தார். செந்தில்குமார் துவக்கி வைத்தார். மருத்துவர்கள் சுனில்ராய், ரமேதா, மயூரநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் புற்றுநோய்க்கான இலவச ஆயுர்வேத மருந்துகளும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், காலாணி, ஆறாத நாட்பட்ட புண்கள், தோல்நோய்கள் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 469 நோயாளிகள் கலந்து கொண்டனர்.

Tags : camp ,Ayurvedic Medical College ,Kottar State ,
× RELATED காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு...