×

சாக்கடை கால்வாய் அடைப்பு தொற்று பரவும் அபாயம்

திருப்பூர்,ஏப்.25: திருப்பூர் மாநகராட்சிகுட்பட்ட 25 வது வார்டு மேட்டுப்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் பின்னாலடை, டையிங் போன்ற தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. வீடுகளிலிருந்தும்,தொழில் நிறுவனங்களிலிருந்தும் வெளியாகக்கூடிய கழிவுநீர் அப்பகுதியிலுள்ள சாக்கடைகளில் செல்கிறது.  இந்நிலையில் இந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை மாநகராட்சி சார்பில் முறையாக தூர்வாராமல் குப்பைகள் அடைத்து காணப்படுகிறது.   இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் உள்ள சாக்கடை கழிவுநீர் பிரதான சாக்கடை கால்வாய்க்கு செல்வது தடைபட்டு தேங்கி நிற்பதால் நாளாடைவில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது; எங்கள் பகுதிக்குள் இருக்கூடிய குடியிருப்புகளில் அதிகப்படியான குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சாக்கடையை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகின்றது. சாக்கடை நீர் தேங்குவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன். சாக்கடை புழுக்கள் வீட்டிற்குள் வருகிறது. இதனால், சில பொதுமக்களுக்கு பலவிதமான காய்ச்சல்களும் வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வும் ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் எந்த வித தீர்வும் ஏற்படவில்லை. இவ்வாறு கூறினர்.


Tags : sewer cancellation ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...