×

கொழுமம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உடுமலை,ஏப்.25:  உடுமலை அடுத்துள்ள கொழுமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில்  உள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்  துவங்கியது. திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் தாலூகா கொழுமம்  கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக  கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம்  நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. 23ம் தேதி காலை 8 மணிக்கு விக்னேஷ்வர  பூஜை, சுத்தி புண்யாவாசனம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு அமராவதி  ஆற்றிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கம்பம் கோயில் வளாகத்தில்  நடப்பட்டது.  இதையடுத்து அம்மனுக்கு விசேஷ பூஜை மற்றும் மஹா தீபாராதனை  நடைபெற்றது. வரும் மே மாதம் 4ம் தேதி இரவு 11 மணி அளவிலல் கோயில் பூவோடு,  திருக்கம்பத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 5ம் தேதி  பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மே 6ம் தேதி இரவு 8 மணிக்கு  அன்னாபிஷேகம், அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மே7 மற்றும் 8ம்  தேதி இரண்டு நாட்களும் பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவவு9  மணிக்கு அம்மன் புஷ்பரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. மே 9ம்  தேதி காலை 4 மணிக்கு திருக்கம்பம் அமராவதி நதி சேர்த்தல், காலை 8 மணிக்கு  மஞ்சள் நீர் ஊர்வலம், மண்டகப்படி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.மே 15ம்  தேதி மாலை 6மணிக்கு மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி நேற்று  (24ம்தேதி) முதல் மே மாதம் 6ம் தேதி வரை தினமும் மாலை 4 மணிக்கு சிறப்பு  அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
.

Tags : Festival Mariamman Temple Festival ,
× RELATED தெலுங்குபாளையம், செல்வபுரத்தில்...