×

தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

பந்தலூர், ஏப்.25: பந்தலூர் அருகே மேங்கொரேஞ் தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் சூறாவளி காற்றுக்கு குடியிருப்புகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
 பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதில் மேங்கொரேஞ் பகுதியில் உள்ள தனியார் தேயிலைத்தோட்டம் தொழிலாளர்கள் குடியிருப்பின் சிமென்ட் சீட் கூறைகள் சூறைக்காற்றில் உடைந்து சேதமானதால் அவர்கள் பயன்படுத்தி வந்த வீட்டு உபயோகப்பொருட்கள் முற்றிலும் சேதமானது. பாதிக்கப்பட்ட மக்கள் அக்கம்பக்கதில் உள்ள உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர். இதனால் சேதமான குடியிருப்புகளை தோட்ட நிர்வாகம் சீரமைத்து தர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  சம்பவம் குறித்து கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி, மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி, பந்தலூர் வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...